ஜிம் செய்பவர்கள் சாப்பிடுவது மாவா? மாத்திரையா? உண்மையைத் தெரிந்து கொள்வோம்!

சப்ப்ளிமெண்ட் என்றால் என்ன? உண்மை தெரியாமல் பயப்பட வேண்டாம்!



ஜிம் செய்யும் ஒருவர் "நான் சப்ப்ளிமெண்ட் எடுக்கிறேன்" என்று பிறரிடம் கூறினால் பொதுவாக பலர் திரும்பக் கேட்பது: 


"மாத்திரை பயன்படுத்துகிறாயா?"


"மாவு சாப்பிடுகிறாயா?"


"நிறைய பக்க விளைவுகள்

 வந்துவிமாமே?"


"மனித உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடியதாமே?" 


💉"ஸ்டீராய்டையா பயன்படுத்துகிறாய்?"


இப்படிப்பட்ட நம்பிக்கைகள் உண்மையிலேயே தவறானவை மற்றும் பிழையான புரிந்துணர்வால் ஏற்பட்டவை ஆகும். இனி உண்மை என்ன என்பதைப் பற்றி பார்க்கலாம்.



🤔சப்ப்ளிமெண்ட் யாரெல்லாம் பயன்படுத்துகிறார்கள்?


🤕நோயாளிகள்:-

வைட்டமின் குறைபாடு, ஹீமோகுளோபின் குறைபாடு, நோய் காலத்தில் தூக்கமின்மை, சோர்வு போன்றவை காரணமாக மருத்துவர் பரிந்துரைக்கும் அளவில் சப்ப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்கிறார்கள்.



🤸உடற்பயிற்சி செய்பவர்கள்:-

 சிலர் தசை வளர்ச்சி மற்றும் கண்டிஷனிங் ஆற்றல் பெற Protein powder, Creatine, BCAA போன்றவற்றை எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் அதுவும் உணவுடன் சமநிலை வைத்துக்கொள்ளவே எடுத்துக் கொள்கின்றனர்.




🤔 உடற்பயிற்சி செய்பவர்கள் எல்லோரும் சப்ப்ளிமெண்ட் எடுக்க வேண்டுமா?


❌இல்லை 


உணவிலேயே சத்துக்கள் முறையாகக் கிடைத்தால், சப்ப்ளிமெண்ட் தேவையே இல்லை.  


உங்கள் உணவில் இறைச்சி, மீன், முட்டை, பருப்பு, சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், இயற்கை கொழுப்புகள் இருக்குமானால் அவை போதும்.



🤔 பிறகு ஏன் சிலர் சப்ப்ளிமெண்ட் அதிகம் எடுத்துக் கொள்கிறார்கள்?


பாடிபில்டிங் போட்டிகளிள் கலந்து கொள்பவர்கள், சில விளையாட்டு வீரர்கள், நடிகர்கள், விளம்பர மாடல்கள் போன்றவர்கள் தங்கள் உடலை காட்சிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பயிற்சி செய்கிறார்கள்.


இவர்கள் இப்படி ஒரு இலக்கை நோக்கி பயிற்சி செய்து அத்துடன் கடுமையான டயட் ஃபாலோ பண்ண வேண்டும்.


அதன் மூலம் அவர்களுக்கு விரைவான தசை வளர்ச்சி மற்றும் பெட் லாஸ் ஏற்பட வேண்டும் எனவே இவர்களுக்கு போதுமான சத்துக்களை உணவிலிருந்து மாத்திரம் பெற்றுக் கொள்வது என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றதாகும்


அதனால் தான் இப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான உணவையும் எடுத்துக்கொண்டு அதற்கு மேலதிகமான ஒரு சிறந்த வழியாக இந்த சப்ளிமெண்ட்டை எடுத்துக்கொள்கிறார்கள்.  


இதில் கூட பலர் மருத்துவ ஆலோசனை, பயிற்சி ஆலோசகரின் வழிகாட்டுதலுடன் மட்டுமே சப்ப்ளிமெண்ட் எடுப்பது சரியானது.

மற்றும் பொதுவாக தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி செய்பவர்களும் சப்ளிமெண்ட்களை எடுத்துக் கொள்கின்றனர்.


அவர்களுக்கும் அதே காரணம்தான் உணவின் மூலம் முழுப் போசாக்கையும் பெற்றுக் கொள்வது என்பது சிரமமானது அப்படி பெற்றுக் கொள்ள முயற்சி செய்து அதிகமான உணவுகளை உட்கொள்ளும் போது ஜீரணக் கோளாறுகள் பிரச்சனைகள்தான் ஏற்படும்.


ஆனால் அவர்களும் ஒவ்வொரு சப்ளிமென்டையும் பயன்படுத்த பரிந்துரை செய்யப்பட்ட குறிப்பிடப்பட்ட உரிய பொருத்தமான அளவிலேயே எடுத்துக் கொள்கின்றனர்.


அந்த அளவுகளுக்கு மாற்றமாக அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வார்களே பக்க விளைவுகளுக்கு உள்ளாகின்றனர்.



🤔 சப்ப்ளிமெண்ட் மற்றும் ஸ்டீராய்டு இரண்டுக்கும் இடையிலான வித்தியாசம் என்ன?


இது மிக முக்கியமான புள்ளி!  


💉ஸ்டீராய்டு என்பது மருந்து வகையில் அடங்கக் கூடியது.


அதை மருத்துவக் காரணங்கள் இல்லாமல் எடுத்தால் அதிக ஆபத்தானது நிறைய பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது.  


ஆனால் சப்ப்ளிமெண்ட் என்பது அவ்வாறல்ல அது உணவுடன் ஒரு துணை nutrition னாகத்தான் பயன்படுத்தப்படுகிறது.


உணவிலிருந்து ஒருவருக்கு தேவையான சத்துக்களை  முழுமையாகப் பெற்றுக் கொள்ள முடியாத சந்தர்ப்பத்தில் இவற்றைப் பயன்படுத்த முடியும்.  



சப்ளிமெண்ட் பற்றிய பொதுவான மூடநம்பிக்கைகளும் – சரியான புரிந்து கொள்ளல்களும்


சப்ப்ளிமெண்ட் = ஸ்டீராய்டு என்பது தவறு சப்ப்ளிமெண்ட் என்பது உணவுக்கு துணை. 


ஒருவரைப்பார்த்து மாவு சாப்பிடுறான், மாத்திரை அடிக்கிறான் என்று எண்ணுவது தவறு. அவை உணவுக் கூடுதலாகத் தேவையான சத்து அவ்வளவுதான்.

    

பக்கவிளைவு கண்டிப்பாக வரும் என்று விவாதிப்பது தவறு. சுத்தமான,முறையாக பரிசோதிக்கப்பட்ட சப்ப்ளிமெண்ட்டை, சரியான அளவில் எடுத்தால் பாதிப்பு கிடையாது. 


"அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்பது சப்ளிமண்ட்டுக்கு மாத்திரமல்ல எல்லா வகையான உணவுகளுக்கும் பொருந்தும்



தெளிவு:-

என்ன சாப்பிடுகிறோம் என்ற புரிதலே முக்கியம்.  

உணவுக்குத் துணைதான் சப்ப்ளிமெண்ட்.  

மனதில் பயம் வைத்துக் கொள்ள வேண்டியதில்லை.  

ஆரோக்கியம், பாதுகாப்பு, அறிவுடன் எடுத்துக் கொள்வது தான் சிறந்த வழி.


கருத்துரையிடுக

புதியது பழையவை