என்னால் எவ்வாறு வெறும் கைகளால் சுவற்றை தாக்க முடிகிறது

Fitness And Martial Arts Tips வலைதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.



இந்த பதிவில், பாரம்பரியமும், என் சொந்த முறைகளும் கலந்த கையை கடினமாகும் பயிற்சி (hand conditioning)* பயணத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.

நான் சில சிறிய யூட்யூப் வீடியோக்களில், என் கை மூலம் கான்கிரீட் தூண்கள், கட்டிட சுவர்கள் போன்ற கடின மேற்பரப்புகளை தாக்கும் பயிற்சிகளை பகிர்ந்துள்ளேன். 

இது யாரும் செய்து காட்டாதவாறு செய்யப்படும் அசல் பயிற்சி — அதாவது யதார்த்த முயற்சி, எந்தச் சாகசமோ, எடிட்டோ இல்லை.



தொடக்கத்தில் இந்த பயிற்சி மிக கடினமானது.

கையில் வலி, டிசு தாக்கப்படுதல்  ஆகியவை பிரச்சனை எல்லாம் நடந்தது. ஆனால் அவை எதுவும் எனது பயணத்தை தடுக்கவில்லை. 

கொஞ்சம் கொஞ்சமாக மெதுவாகத் தொடங்கி, படிப்படியாக தாக்கும் சக்தியை அதிகரித்தேன். தொடர்ச்சியாக பயிற்சி செய்தேன்.

நேரம் செல்ல செல்ல, என்னுள் இருந்த பயம் மறைந்து விட்டது. இப்போது எந்த கடின மேற்பரப்பையும், முழு நம்பிக்கையுடன் தாக்க முடிகிறது.  

ஒரு சாதாரண நபர், கான்கிரீட் சுவர் பார்த்தால் கையை வைக்க பயப்படுவார்.  

ஆனால் சரியான பயிற்சியால், அந்த பயத்தைக் கடந்துவிடலாம்.



பயிற்சிகள்:-

- சுவர்கள் மீது பஞ்ச் ப்ராக்டிஸ்  
- குத்துச்சண்டைக்காக கருவிகள் இல்லாமல் விரல்கள், முழங்கைகள், மனது ஆகியவற்றின் உறுதியை வளர்த்தல்
- குறிப்பாக, மூட்டு உறுதி மற்றும் சரியான டெக்னிக் என்பவற்றில் கவனம்  
- மனதை அமைதியாக வைத்தல் மற்றும் பயத்தைக் கட்டுப்படுத்துதல்
இது யாதொரு மாயமோ அல்ல.  
முறையான பழக்கமும், பொறுமையும், ஒழுக்கமும் இதில் முக்கியம்.


எனது நோக்கம்:-


ஒரு சாதாரண நபரும், தொடர்ந்து பயிற்சி செய்தால், நம்பமுடியாத ஒன்று கூட சாத்தியமடையலாம் என்பதை நிரூபிப்பது.

நீங்களும் வாழ்க்கைமுறை அடிப்படையிலான தற்காப்பு கலை நுணுக்கங்கள், உடற்பயிற்சி முறைகள், உடல் சம்மத்தமான விடயங்கள் மற்றும் ரகசியங்கள் போன்ற அறிவை வளர்த்துக் கொள்ள விரும்பினால், எனது வலைத்தளத்தை தொடர்ந்து பாருங்கள்.



இன்னும் தொடர்ந்து பல பயிற்சி விடயங்களை பேசுவோம்...


கருத்துரையிடுக

புதியது பழையவை